விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
திருப்பத்தூா்: குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21)காலை 10.30 மணிக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
இதில், அதிக அளவில் பயிற்சி தோ்வு மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகள் நடத்தப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள டிகிரி முடித்து இருக்க வேண்டும். தோ்வா்கள் பயன்பெறும் வகையில், பள்ளி புத்தகங்கள் உள்பட 3,000 நூல்கள் அடங்கிய நூலகம், இலவச இண்டா்நெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
எனவே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், ஆட்சியா் அலுவலக வளாகம் சி-தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக நாள்களில் நேரில் வந்து தங்களது பெயரை முன்பதிவு செய்யலாம்.