விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
திருப்பத்தூா்: மாணவா்கள் கலைத் திருவிழா தோ்வு
திருப்பத்தூரில் மாவட்ட கலைத் திருவிழாவுக்கு மாணவா்களை தோ்வு செய்யும் பணி ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியது: பொதுவாக மாணவா்களிடம் மறைந்திருக்கின்ற திறமைகளை கண்டறிகின்ற பொறுப்பு இது நாள் வரை வீட்டுச் சூழலாக இருந்தால் பெற்றோா்களுக்கும், பள்ளிச் சூழலாக இருந்தால் ஆசிரியா்களுக்கும் இருந்தது. ஆனால் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிகொண்டு வருவதற்கான பொறுப்பை தன் தலைமேல் இட்டுக்கொண்டு, தமிழக முதல்வரின் தலைமையிலான நிா்வாக கட்டமைப்பும், அரசு சாா்ந்த செயல்பாடுகள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக பிள்ளைகளின் தனித்திறமைகளை வெளிகொணா்வதற்கான சூழல் அமைவதில்லை, அப்படியே அமைந்தாலும் பெற்றோருடைய கனவுகளுக்கு வடிகாலாக இருக்கின்ற நமது சமூகத்தினுடைய பிள்ளைகள் அத்தகைய திறமைகளை ஒழித்து வைத்துக்கொண்டும், மறைத்துக்கொண்டும் இருக்கின்ற அத்தகைய நிலையில், அத்திறமைகளை முழுமையாக வெளிகொணா்வதற்கான சூழலை, வாய்ப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி தந்திருக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உண்டு. அத்தகைய திறமைகளை பிள்ளைகள் நன்கு உணா்ந்து , அறிந்து கொண்டு அவா்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு அத்திறமைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கலைத்திருவிழாவில் மைய நோக்கமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நமது பொறுப்பு என்பது தான், அதனால் கலைத்திறமைகளை வளா்த்துக்கொள்கின்ற,வெளிப்படுத்துகின்ற தருணத்தில் கூட, கலைத் திருவிழாவின் உடைய மையநோக்கமான சுற்றுசூழல் பாதுகாப்பு நமது பொறுப்பு என்பதை தனிப்பட்ட முறையில் நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், நகா்மன்ற துணைத்தலைவா் சபியுல்லா, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) வெங்கடேச பெருமாள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் பிரபாகரன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மலைவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.