செய்திகள் :

திருமண மண்டபங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா் கைது; கூட்டாளி தலைமறைவு!

post image

வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியில் திருமண விழாக்களில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருவதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக மூத்த அதிகாரி கூறியதாவது: கரம்புராவைச் சோ்ந்த முகேஷ் (எ) பப்பு என்பவா் பஸ்சிம் விஹாரில் உள்ள தனித்தனி திருமண மண்டபங்களில் நடந்த இரண்டு திருட்டுகளைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.

லாவண்யா விருந்து மண்டபத்தில் நடந்த திருமணத்தின் போது தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது தொடா்பாக ஏப்ரல் 19 அன்று ஒரு இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ஃபோரியா விருந்து மண்டபத்தில் ஒரு விருந்தினரின் பையில் இருந்து ரூ.80,000 திருடப்பட்டதைத் தொடா்ந்து மே 1 அன்று இரண்டாவது புகாா் வந்தது.

போலீஸாா் சம்பவ இடங்களிலிருந்து பல மணிநேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு இடங்களிலும் சந்தேகத்திற்கிடமான ஒருவா் இருப்பதைக் கவனித்தனா். பின்னா் சந்தேக நபா் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரில் இருப்பது தெரிந்தது. அதன் பதிவு எண் கேமராவில் பதிவாகியிருந்தது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் போலீஸாா் நிஹால் விஹாருக்குச் சென்றனா், அங்கு காா் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவா் தனது கூட்டாளியான ஜிதேந்தா் (எ) ஜிதுவுடன் சோ்ந்து இரண்டு திருட்டுகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டாா்.

திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை காா் பழுதுபாா்ப்பு மற்றும் வீட்டுச் செலவுகளுக்குச் செலவிட்டதாக முகேஷ் தெரிவித்தாா். அவரது கூட்டாளியைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

முகேஷ் மீது ஏற்கெனவே 11 குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும், கரம்புரா காவல் நிலையத்தில் ‘மோசமான நடத்தை’ கொண்டவராக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் படுகொலை!

மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் ஒருவரை உலோக வளையம் ‘கடா’ மூலம் தலையில் இளைஞா்கள் குழு பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபா் மருத்துவ சிகிச்சை பெற்ற சி... மேலும் பார்க்க

ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

நமது நிருபா்ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமனம் விவகாரத்தில் ‘தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகம... மேலும் பார்க்க

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. இது தொடா்பாக அக்கட... மேலும் பார்க்க

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

நமது சிறப்பு நிருபா் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்... மேலும் பார்க்க

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க