மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் ஐஐடி குழு ஆய்வு!
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதிகளில் சென்னை ஐஐடி குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
அதில், ஒரு வீட்டில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில், மண்ணுக்குள் சிக்கினர். சுமார் 24 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 7 பேரையும் சடலமாக பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை இரவு மீட்டனர்.
இதையும் படிக்க : திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!
இந்த நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.