செய்திகள் :

திரைப்படமாகும் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!

post image

பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கார் பந்தய போட்டியின் மீது கவனமும் ஆர்வமும் இருந்தாலும் இதை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் நரேன் கார்த்திகேயன்.

உலகளவில் பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போட்டிகளில் முதலிடம் வென்று கார் பந்தயத்தில் இந்தியாவின் முத்திரையைப் பதித்த நரேன், 2005 ஆம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற ஃபார்முலா - 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றதுடன் அப்போட்டியில் 18 ஆம் இடம் பிடித்தார்.

பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவர் தற்போதும் கார் பந்தயம் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நரேன் கார்த்திகேயன்

இந்த நிலையில், நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உள்ளதாகவும் இதை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பல விளையாட்டுத் துறை வீரர்களின் பயோபிக் உருவாகியிருந்தாலும் முதல்முறை கார் பந்தய வீரரின் படம் குறித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ரௌடிகளை வைத்து உதவி இயக்குநரை மிரட்டிய கோபி நயினார்?

racer narain karthikeyan life and carreer turns into new biopic movie directed by mahesh narayanan

மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற பாட்ஷா!

மறுவெளியீடான பாட்ஷா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.இன... மேலும் பார்க்க

எல்ஐகே - எஸ்ஜே சூர்யா போஸ்டர்!

பிரதீப் ரங்கநாதன் நாயனாக நடிக்கும் எல்ஐகே படத்தின் எஸ்ஜே சூர்யாவுக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர்பிரதீப் ரங்கநாதனைவைத்து புதிய படத்தைஇயக்கி வருகிறார்.இப்படத்திற்கு, லவ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் ஷாருக்கானுக்கு காயம்!

நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜவான், டங்கி வெற்றிக்குப் பின் நடிகர் ஷாருக்கான் கிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்... மேலும் பார்க்க

பான் இந்திய கதைகளில் கவனம் செலுத்தும் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் பான் இந்தியத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமான நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிஃபர்... மேலும் பார்க்க