காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
தில்லி பேரவையின் துணைத் தலைவராக மோகன் சிங் தேர்வு!
தில்லி சட்டப் பேரவையின் துணை தலைவராக பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்வர் ரேகா குப்தா கொண்டுவந்த தீர்மானத்தைச் சுற்றுச்சுழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார், அதேநேரத்தில் அனில் குமார் சர்மா முன்மொழிந்த இரண்டாவது தீர்மானத்தை கஜேந்தர் சிங் யாதவ் ஆதரித்தார்.
ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த பாஜக தலைவர் மோகன் சிங் பிஷ்ட்(67), பிப்ரவரி 5ல் நடைபெற்ற தில்லி தேர்தலில் முஸ்தபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கானை 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முஸ்தபாபாத் தொகுதிக்கு முன்பு, மோகன் சிங் பிஷ்ட் 1998 முதல் 2015 வரை கரவால் நகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2020ஆம் ஆண்டு மீண்டும் அந்த தொகுதியை வென்றார்.
பாஜகவின் தீர்க்கமான வெற்றிக்குப் பிறகு, எட்டாவது தில்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் பத்தாண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
70 இடங்களில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களையே பிடித்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.