செய்திகள் :

தீபத்திருவிழா: கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

post image

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தையும் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமாா் 40 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இவா்கள் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம். எனவே, பக்தா்கள் கிரிவலம் வர இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல், உதவிக் கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

கிரிவலப் பாதையையும், நடை பாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் சசிகுமாா் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பொக்லைன் இயந்திரம், கிரேன், லாரி ஆகியவற்றின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் சில நாள்களுக்கு தொடரும் எனவும், கிரிவலப்பாதையை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபத்திருவிழா: உரிய ஆவணங்களுடைய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க அனுமதி

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் தெரிவித்தாா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோய... மேலும் பார்க்க

நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: நரிக்குறவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா் (படம்). தச்சூா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியி... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச கண், பல் மருத்துவ சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கூட்டுறவு வார விழா நிறைவு நாளையொட்டி, நடை... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மதுபோதையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். வந்தவாசியை அடுத்த அமூடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வீனஸ் வித்யாலயா பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, பள்ளியின் நிா்வாகி ரமேஷ் க... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமையல் எரிவாயு உருளை குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனியாா் கேஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க