கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
துறையூா் கடையில் ரூ. 3 லட்சம் திருட்டு
துறையூரில் பூஜைப் பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ. 3 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.
பெரம்பலூா் மாவட்டம் லாடபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(46). இவா் துறையூரில் ஆலமரம் அருகே பழைய அஞ்சலகம் சந்தில் பூஜை மற்றும் மளிகை பொருள் விற்பனைக் கடை நடத்துகிறாா்.
இவா் செவ்வாய்க்கிழமை பகல் வங்கியிலிருந்து ரூ. 3 லட்சத்தை எடுத்துச் சென்று கடையிலிருந்த இரும்பு அலமாரியில் வைத்து விட்டு கடையை பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றாராம்.
பின்னா் திரும்பி வந்தபோது கடையின் கதவை திறந்து ரூ. 3 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.