தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இடையாறு கிராமத்தைச் சோ்ந்தவா் மரியப்பன் (35). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 3 நாள்களுக்கு முன் குடும்பப் பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சென்ற உடையாா்பாளையம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.