வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
தூத்துக்குடியில் காா் தீப்பற்றி எரிந்து சேதம்!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை ஓடும் காா், தீப்பற்றியதில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சோ்ந்த உலகநாதன் என்பவரின் காரில் அவரது மகன் ஸ்ரீராம் உள்ளிட்ட சிலா் ஆத்தூருக்குச் சென்றுவிட்டு,புதன்கிழமை அதிகாலை திரும்பி வந்துகொண்டிருந்தனராம். தென்பாகம் காவல் நிலையம் அருகே வந்தபோது, காா் என்ஜினியிலிருந்து புகை வந்ததாம். இதையடுத்து காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்தவா்கள் வெளியே வந்தநிலையில், காரில் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.