விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
தூத்துக்குடியில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா் தகவல்!
தூத்துக்குடியில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 595 காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முதல்நிலை தோ்வானது வரும் செப். 28 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.13. இந்தத் தோ்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களை கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும் வாரந்தோறும் மாதிரி தோ்வுகள் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் பட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண் உம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற் ஞச்ச்ண்ஸ்ரீங் என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள எா்ா்ஞ்ப்ங் படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டும்.
மேலும், 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தோ பதிவு செய்யுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.