செய்திகள் :

தூத்துக்குடி: "எங்க ஊர் சுடுகாடு மாதிரி இருக்குது" - 23 ஆண்டுகளாகப் போராடும் மக்களை கவனிக்குமா அரசு?

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஊர் கணேசபுரம். இங்கு சுமார் இருநூறு பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகக் கடந்த 2001-ம் ஆண்டு, அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடு கட்டிக் கொள்ள இலவச பட்டாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கணேசபுரம் - தூத்துக்குடி

ஆனால், இந்த நிலம் வழங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆன பின்பும், சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. 184 வீட்டுமனைகளுக்கு வெறும் இரண்டு குடிநீர் குழாய்கள்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு குடிநீர் குழாய்களும் இப்போது சேதமடைந்த நிலையில்தான் உள்ளன. சாலை வசதி இல்லாததுதான் இப்பகுதி மக்களின் முக்கியமான பிரச்னை.

கணேசபுரம் - தூத்துக்குடி

சாலைகளுக்காக விடப்பட்ட பாதைகள் முழுவதும் முட்புதர்களும், சீமைக்கருவேல மரங்களும் படர்ந்து கிடக்கின்றன. இதன் நடுவேதான் இரவு நேரங்களிலும் மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவற்றோடு தெருவிளக்குகளும் ஒழுங்காக எரிவதில்லை எனக் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் அப்பகுதி மக்கள்.

அப்பகுதி மக்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் வெகுதொலைவிலிருந்து தண்ணீர்க் குடத்தைச் சுமந்து வந்து கொண்டிருந்த சித்திரைக்கனி என்ற மூதாட்டி,”எனக்கு 72 வயசாகுது. எங்க ஊருக்கு தண்ணியும் கிடையாது, ரோடும் கிடையாது. இப்போ கூட பக்கத்து ஊருல இருந்துதான் எடுத்துட்டு வந்துட்டு இருக்கேன். இந்த இடத்துல எப்படியாச்சும் வீடு கட்டிறனும்னு என் ஊர் காரப் பயலுவ கொஞ்ச கொஞ்சமா காச சேக்கானுவ.

கணேசபுரம் - தூத்துக்குடி

ஆனா, ரோடு இல்லாததால சிமெண்டு, கல், செங்கல் எல்லாத்தையும் உள்ள கொண்டு வர முடியாது. உள்ள கொண்டு வந்தா டயர் மண்ணுக்குள்ள பதிஞ்சுரும். அதனால அர கிலோமீட்டருக்கு அங்க இருந்தே சுமந்து தான் கொண்டு வரனும். அப்படி கொண்டு வந்தா டபுள் கூலி கொடுக்கனும். அதனாலேயே நிறைய வீடுங்க கட்டி முடிக்காம அப்படியே சுடுகாடு மாதிரி கிடக்குது.” என நம்மிடம் விம்மினார்.

அவரைத்தொடர்ந்து, “இது மட்டும்தான் பிரச்னைன்னு இல்ல இன்னும் நெறய இருக்கு” என பேசத் தொடங்கிய அப்பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், “இருநூறு குடும்பங்கள் இருக்குற எங்க ஊரில் ஒரே ஒரு கழிப்பறையத் தாண்டி எந்த அரசாங்க கட்டடமும் கிடையாது. சுமார் 80 குழந்தைங்க பள்ளிக்கூடம் போகக்கூடிய எங்க ஊருல ஒரு தொடக்கப்பள்ளிக்கூட கிடையாது. ஒரேயொரு அங்கன்வாடி இருக்குது. அதுக்குகூட சொந்த கட்டடம் இல்லாம தனியார் கட்டடத்துலதான் செயல்படுது.

கணேசபுரம் - தூத்துக்குடி

எங்க ஊருல பஸ்டாப் கிடையாது. ஒரு கிராமத்துக்கு அடிப்படையா என்ன வசதி எல்லாம் இருக்கனுமோ, அது எதுவுமே எங்க ஊர்ல இருக்காது. எங்களோட பக்கத்து ஊரான கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சிவ ஆனந்திதான் திருச்செந்தூர் நகராட்சிமன்றத் தலைவியா இருக்காங்க. அவங்ககிட்ட பலமுறை கோரிக்கை வச்சும் எந்த நடவடிக்கையும் இல்ல.” என்றார் வேதனையோடு கூறினார்.

கணேசபுரம் - தூத்துக்குடி

இப்படியான சூழலுக்கு மத்தியில் இப்பகுதி மக்கள் திருச்செந்தூர் நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கவே, கடந்த திங்களன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக நகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

நகராட்சி உறுதியின்படி, 23 ஆண்டுக்கால அடிப்படைக் கோரிக்கைகள் இம்முறையாவது நிறைவேற்றித் தரப்படுமா என்று கணேசபுரம் மக்கள் அரசை எதிர்நோக்குகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

CAG Report: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு... எவ்வளவு தெரியுமா?!

நேற்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையகம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றான 2022-23 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில நிதிநிலை அறிக்கை படி, 2022 - 23 ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.23... மேலும் பார்க்க

உ.பி: 185 வருட பழைமையான மசூதியின் ஒரு பகுதியை இடித்த மாவட்ட நிர்வாகம்; போலீஸார் குவிப்பு!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் பெரும்பாலும் சிறுபான்மையினருக்கெதிராக நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப்... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 17% குறைந்திருக்கிறது!'' - சி.ஏ.ஜி அறிக்கை

31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை ... மேலும் பார்க்க

Pan 2.0: `QR Code உள்ள புதிய பான் கார்டு' - எப்படி, எதில் விண்ணப்பிக்க வேண்டும்?

பான் 2.0 திட்டத்தின் படி, நமது பான் கார்டுகளில் QR CODE இடம்பெற உள்ளன. இது பான் கார்டு மூலம் நாம் பெற உள்ள சேவைகளை எளிதாக மாற்ற உள்ளது. அதனால், புதியதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு QR CODE உடன்... மேலும் பார்க்க

``எத்தனை காலத்துக்கு இலவசங்கள்? வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" -அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

2021, ஜூன் மாதம் கொரனோ கலகட்டத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், `மத்திய அரசு ஒரு போர்ட்டலை உருவாக்கி அதில் அன... மேலும் பார்க்க

திருச்சி: கட்டிமுடிக்கப்படாத சுரங்கப்பாதை; அச்சத்தில் பெண்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒரு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. முக்கியமாக கோவிலூர் மற்றும் நந்தவனம் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உ... மேலும் பார்க்க