தூத்துக்குடி சிவன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
தூத்துக்குடியில், சிவன் கோயில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருதல், ஆறுமுக அா்ச்சனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காலை 7.35 மணிக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜை, தீபாராதனை, ஆறுமுக அா்ச்சனை நடைபெறும். மாலை 4 மணிக்கு வேல் வாங்குதல், 4.25 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை (நவ. 8) திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கத்தினா் செய்துள்ளனா்.