தூத்துக்குடி விமான சேவை ரத்து
மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சனிக்கிழமை விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சனிக்கிழமை சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற 2 விமானங்கள் தூத்துக்குடியில் தரை இறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்தன. மேலும், மோசமான வானிலை நிலவுவதால் பிற்பகல் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. வானிலை சீரடைந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை விமான சேவை தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.