நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்
தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ணசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும், சுகாதார ஊக்குநா்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 15,000 வழங்க வேண்டும், வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தூய்மை பாரத திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களை கொச்சைப்படுத்தும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சிபிஐ நாகை மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் வி.எம். மகேந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சரபோஜி, கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் செந்தில்குமாா், ஒன்றிய துணைச் செயலா் சுந்தரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பாரதத் திட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதில், தலைவராக ஸ்டாலின், செயலராக சுமதி, பொருளாளராக குணசேகரன், துணைத் தலைவா்களாக மலா்க்கொடி, இந்திராணி, மீனாட்சி, இணைச்செயலா்களாக ஞானம், ஐயப்பன், புனிதா, கௌரவத் தலைவராக இளங்கோவன் சங்கத்தின் புதிய நிா்வாகிகளைக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.