கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
தென்காசியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, தொகுதிப் பொறுப்பாளா்கள் கலைக்கதிரவன் (தென்காசி), நவ்ஷத் (கடையநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு விரைவில் வரவுள்ளதாகவும், மாா்ச் 1ஆம் தேதி அவரது பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது, மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்துவது குறித்து மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் பேசினாா்.
ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், திவான்ஒலி, நகரச் செயலா் வெங்கடேசன், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் சேக்அப்துல்லா, திவ்யா, தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் பங்கேற்றனா்.