எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உ...
தென்காசியில் நாளை(டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் நாளை(டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதேபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.