மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
தென் மாவட்டங்களில் கனமழை! சென்னையில் இன்று மழை பெய்யுமா?
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று ஒரு துளி மழைகூட பெய்யாது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்றைய மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
'சந்தேகத்திற்கு இடமின்றி, பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு மிகக் கடுமையான நாள் நேற்று(டிச. 12)தான். பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டத்தை மட்டும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.
மாஞ்சோலை ஊத்து பகுதியில் 500 மிமீ, மயிலாடுதுறை - கடலூரில் 300 மிமீ, தூத்துக்குடி கோவில்பட்டியில் - 350+ மிமீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல குற்றாலம் வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது. பெரம்பலூர்-அரியலூர் இடையேவும் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
ராணிப்பேட்டை வெள்ளத்தில் மிதக்கிறது, அதாவது நந்தியாற்றில் அதிக அளவு நீர் வெளியேறி, பூண்டி அணைக்கு 13,000 கனஅடி நீர் வரத்து உள்ளது. 12,000 கனஅடி வரையில் தண்ணீர் திறக்கப்படும்.
தென்காசி மாவட்டம் ஆயிக்குடி பகுதியில் 300+ மிமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஒரே நாளில் அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஒருதுளி கூட மழை பெய்யாது. செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் 'கொடைக்கானல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்' என்று கூறியுள்ளார்.