செய்திகள் :

"தெம்பு, திராணி, முதுகெலும்பு இருந்தால் பதில் சொல்லுங்கள்" - எடப்பாடி பழனிசாமிக்கு முத்தரசன் சவால்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

முத்தரசன்

அப்போது, “எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நன்கு தெரியும். அவரிடம் முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து விட்டது. இருக்கும் இடமே தெரியவில்லை என்கிறார். மறுபக்கம் எங்களுக்கு ரத்தின கம்பளம் விரிப்போம் எனக் கூட்டணிக்கு அழைக்கிறார். அவரின் அழைப்பை நாங்கள் நிராகரித்துவிட்டோம்.

எடப்பாடி பழனிசாமி பாஜகவுடைய அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறாரா? தேர்தல் ஜனநாயக முறைக்கு பாஜக அவநம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளை 40 என்கிற எண்ணிக்கையிலிருந்து, 8 தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முயல்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு இயற்கை பேரிடர் உள்ளிட்ட எதற்கும் மத்திய அரசு உரிய நிதி கொடுப்பதில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?

பாஜக ஆட்சியை 13  மாதங்களில் கவிழ்த்தவர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பாஜக சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி, அவர்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்திட்டார்.

அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த முறையில் பேசுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்கிறார். நானும் ரவுடி தான். நானும் ரவுடி தான் என்கிற வடிவேலு காமெடி போல எடப்பாடி பழனிசாமி நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறுகிறார். அதிமுக பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி நம்பகமான தலைவர் இல்லை. அவருடன் கூட்டணி சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற எடப்பாடி பழனிசாமி, ஏதேதோ பேசி திசை திருப்புகிறார். எங்கள் அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி, தெம்பு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும்.

ஓபிஎஸ்-சசிகலா
ஓபிஎஸ்-சசிகலா

அதிமுக என்ற திராவிட கட்சி அழிவுப் பாதையில் உள்ளது. அவர்களாக பாழும் கிணற்றில் விழுந்துள்ளனர். அந்தக் கிணற்றில் எங்களையும் இழுக்கப் பார்க்கிறார். எடப்பாடி பழனிசாமியை நம்பிய சசிகலா, ஓபிஎஸ் கதி என்ன ஆனது?” என்று  கேள்வி எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கத் தயார்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்... மேலும் பார்க்க

'கூட்டணியைக் கலைக்கக் களத்தில் குதிக்கும் கட்சிகள்' - அனல் தகிக்கும் தமிழக அரசியல்களம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆளும் தி.மு.க அரசு ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அரியணையைப் பி... மேலும் பார்க்க

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? - செல்வப்பெருந்தகை பதில்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் விஜய்யும் நேரில் சந்திக்கவிருப்பதாக பரவி வரும் தகவல் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்... மேலும் பார்க்க

"எம்.பி-க்கள் வாடகை அலுவலகத்தில் இருக்கும் நிலை"- விசிக எம்.பி ரவிக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள்!

எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் முனைவர் ரவிக்குமார். ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிக்கை மூலம் கருத்தியல் தளத்திலும், களச் செயல்பாடுகளுக்கு மனித உரிமை இயக்கம் என சமூ... மேலும் பார்க்க

"அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பாமக MLA-க்கள் 3 பேர் & வழக்கறிஞர் பாலு சஸ்பெண்ட்" - ராமதாஸ்

பாமக-வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகனும் தலைவருமான அன்புமணிக்கு இடையே நிலவி வரும் கட்சி அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி த... மேலும் பார்க்க