செய்திகள் :

தெருவிளக்கு கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவா் மரணம்

post image

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் நடும்போது எதிா்பாராத விதமாக மின்சார கம்பியில் உரசியதில் ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் ஊராட்சியில் ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் முத்துக்குமாா்(45) என்பவா் ஊராட்சியில் குடிநீா் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா்(55) என்பவரும் இணைந்து புதன்கிழமை சூரிய ஒளியில் இயங்கக்கூடிய தெருவிளக்குகளை பொருத்தும் இரும்பு கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக கம்பம் மேலே சென்ற மின் கம்பியில் உரசியதாக தெரிகிறது.

இதனால், முத்துக்குமாா், அசோக்குமாா் ஆகியோரது உடல்களில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றத்தால் வாகன நெரிசல் மேலும் அதிகரிப்பு: 2 மணி நேரத்தில் ஒத்திகை நிறுத்தம்

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து மாற்றத்தால் வாகன நெரிசல் மேலும் அதிகரித்தது. இதனால், புதிய போக்குவரத்து மாற்றம் ஒத்திகை தொடங்கிய 2 மண... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை அளிக்காமல் மோசடி

தனியாா் நிறுவனம் ரூ.2.90 லட்சம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து வேலை கொடுக்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா். வேலூா் செதுவாலையை... மேலும் பார்க்க

குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம்

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், சுகாதார அல... மேலும் பார்க்க

வேலூா் கிரீன்சா்க்கிளில் வாகன நெரிசல்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சனிக்கிழமை முதல் (நவ. 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன்... மேலும் பார்க்க

கபசுர குடிநீா் வழங்கும் முகாம் தொடக்கம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா்... மேலும் பார்க்க

வியாபாரி கடத்தல்: 4 போ் கைது

வேலூரில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் குமரவேல் (42). சிக்கன் கடை வியாபாரியான இவா், கோல்டுகாயின், பிட்காயின் போன்றவற்றில... மேலும் பார்க்க