மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
தெரு நாய்களுக்கு கருத்தடையில் திருச்சி மாநகராட்சி முன்னிலை
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்வதில் திருச்சி மாநகராட்சி முன்னிலையில் உள்ளது. மேலும் வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயா் மு. அன்பழகன் பேசியது:
திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மொத்தம் 4 கருத்தடை முகாம்கள் அமைக்கப்பட்டு கடந்த நிதியாண்டில் (2023-24) 11,929 நாய்களுக்கும், நடப்பு நிதியாண்டில் (2024-25) 8,892 தெருநாய்களுக்கும் என மொத்தம் 20,821 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாநிலத்திலேயே நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதில் திருச்சி மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது.
வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறுவது அவசியம் : திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 43, 767 நாய்கள் திரிவதாக கணெக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அவற்றை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக மாநிலத்தில் தெரு நாய்களை கணக்கெடுத்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது திருச்சி மாநகராட்சிதான். மேலும் தெருநாய்கள் தவிர வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் உரிமம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.