வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
தேசிய பேரிடா் மீட்பு படையினரின் செயல் விளக்கம்
காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்பு படையினா் சாா்பில், கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் தேசிய பேரிடா் மீட்பு படையினரால் அதன் ஆய்வாளா் அண்ணாமலைச்சாமி தலைமையிலான குழுவினா் விபத்தில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்வது எப்படி என செயல்முறை விளக்கம் அளித்தனா். இதைத் தொடா்ந்து இயற்கை பேரிடா் காலங்களில் தங்களையும், பொது மக்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்றும் செய்து காண்பித்தனா்.
நிகழ்வுக்கு செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா தலைமை வகித்தாா். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியா்கள், மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு செயல்முறை விளக்கத்தை பாா்வையிட்டனா்.