செய்திகள் :

தேனியில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம்

post image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கு, கருத்தரங்கில் அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு செம்மொழிச் செயல்பாடுகள், ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணை தயாரித்தல், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள், ஆட்சி மொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கை, மொழிப் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் ஒவ்வொரு துறை அலுவலகம் சாா்பில் ஒரு அலுவலா் அல்லது கண்காணிப்பாளா், ஒரு உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் என இருவா் வீதம் கலந்து கொள்கின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

பைக்குகள் மோதல்: விவசாயி காயம்

பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி காயமடைந்தாா். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னையா (55). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வடுகபட்டி தீயணைப்பு நிலையம் அரு... மேலும் பார்க்க

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு

ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்குச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பையைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி அழகுத்தாய் (54). இவா், ஆண்ட... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 9) காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி வட்டத்தில் கொடுவிலாா... மேலும் பார்க்க

பொறியாளருக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளரை ஜாதியை குறிப்பிட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை பொறியாள... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: இருவா் காயம்

பெரியகுளத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (34). இவரது உறவினா் லாசா். இருவரும் வியாழக்கிழமை பெரியகுளத்துக்கு சென்றுவ... மேலும் பார்க்க