Arjun: ``ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' - பட விழாவில் நடிகர் அர்ஜுன்
தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை
தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மூக்கை மூடி கொண்டு சென்று வருகின்றனர்.

குறிப்பாக இங்கு கொட்டப்படும் குப்பைகள் பறந்து சாலையில் கிடப்பதால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் “நான் குழந்தையை பள்ளிக்கு அழைத்து வரும்போது, இந்த இடம் வந்தவுடனே என் பையனை ஓடச் சொல்லிவிடுவேன். அந்தளவிற்கு நாற்றம் தாங்க முடியாது.
நகராட்சியினரும் சில நேரங்களில் மட்டுமே குப்பை எடுத்துச் செல்கிறார்கள்; பெரும்பாலும் பல நாட்கள் அங்கேயே குப்பை குவிந்து கிடக்கிறது,
இந்த பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துவருகிறது. குப்பைத் தொட்டி வைக்காமலும், குப்பைகளை சரியாக எடுக்காததுமே இதற்கு காரணம். பள்ளி அருகிலேயே இவ்வளவு குப்பை குவிந்து கிடப்பதால் மாணவர்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சுத்தம் செய்து இங்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, " அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை தொட்டி வைக்கிறோம்" என்றனர்.

















