செய்திகள் :

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை.

இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது.

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் ரதயாத்திரை

இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

"தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான் .

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் நாங்கள் அமைப்போம். தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை" என்று பேசியிருக்கிறார்.

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத... மேலும் பார்க்க

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் - ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் ப... மேலும் பார்க்க

``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன்

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அன்றைய செய்தியாளர் சந்திப்பில், "தமிழ்நாடு அரசியலில் மாற்றம... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவி: சீரமைப்பு பணிகள் எப்போது நிறைவடையும்? - சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது.இங்கு அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புக் கம்பிகள், கழிவறைகள், தார் சாலைகள் முற்றிலு... மேலும் பார்க்க