அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
தேர்தல் பிரசாரத்தின் இடையே பிரசாந்த் கிஷோர் காயம்!
பிகாரில் சாலை வலம் சென்றபோது வாகனம் ஒன்று மோதி, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் காயமடைந்தார்.
பாஜக, திமுக, திரிணமூல் என நாட்டில் பல்வேறு கட்சிகளுக்கு பல தேர்தல்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பிகாரில் 2022ல் 'ஜன் சுராஜ்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
பிகார் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பிகாரில் ஆரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக சாலை வலம் சென்றபோது கூட்டத்தின் நடுவே பிரசாந்த் கிஷோர் நடந்து சென்றுள்ளார். அப்போது வாகனம் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை பாட்னாவுக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயம் எதுவும் இல்லை என்றும் எலும்பில் லேசாக காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜேடியு - பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, ஜன் சுராஜ் கட்சி என பிகாரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.