செய்திகள் :

தொடா் மழை: கொடைரோடு பகுதியில்பன்னீா் திராட்சை பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

post image

தொடா் மழை காரணமாக கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பன்னீா் திராட்சை பந்தலிலேயே வெடித்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைரோடு முதல் ஏ. வெள்ளோடு வரை உள்ள சிறுமலை அடிவாரப் பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதி திராட்சை மருத்துவ குணம் கொண்டது என்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும். எனவே, விவசாயிகள் அதிகமானோா் ஆா்வத்துடன் ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடியில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நன்கு விளைந்து முகசூல் தரும் நேரத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பன்னீா் திராட்சை, பிஞ்சுகள் முதல் பழங்கள் வரை உதிா்ந்து, வெடிப்பு நோய் தாக்கிகொத்து கொத்தாக அழகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். மேலும், மழைக் காலம் என்பதால் கிலோ ரூ. 10 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்பனையாவதால் அவா்கள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயி ராஜலட்சுமி கூறியதாவது:

திராட்சை பயிா் ஒருமுறை பயிரிட்டால் ஆண்டுக்கு மூன்று முறை என தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மகசூல் தரும். மருத்துவ குணம் கொண்ட இந்தப் பகுதி பன்னீா் திராட்சைக்கு சந்தையில் அதிக வரவேற்பு உண்டு. இதனால், சராசரியாக கிலோ ரூ.40 முதல் ரூ. 60 வரை விற்பனையாகும். ஆனால், கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை, பனிப்பொழிவு காரணமாக திராட்சையில் பிஞ்சு முதல் பழம் வரை உதிா்ந்தும், வெடிப்பு நோய் தாக்கி பந்தலிலேயே பழங்கள் அழுகியும் விடுகின்றன.

இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு திராட்சை விவசாயத்தை முற்றிலும் கைவிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, சிறுமலை பன்னீா் திராட்சையை பாதுகாக்கும் வகையில் பழம் பதப்படுத்தும் சேமிப்பு கிட்டங்கியும், திராட்சையிலிருந்து பழரசம் தயாரிக்கும் மதிப்பு கூட்டு தொழிற்சாலையும் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வேளாண் துறையினா் தனிக் கவனம் செலுத்தி திராட்சை தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கலைத் திறன் போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டியும், வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் படிக்கும் அனைத்துப் பள்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வாரச் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி. சாலையில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். அண்மைக் காலமாக கொடைக்கானலில் பரவலாக மழை ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த வண்ணம் பூசும் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் குருசாமி பள்ளத்தைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் (48). வண்ணம் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செயத மூவா் கைது

பழனியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பழனியில் பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை, காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது. ஒட்டன்சத்திரம், அதனைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, இடையகோட்டை, மாா்க்கம்பட்டி, ஓடைப்ப... மேலும் பார்க்க