வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
உடன்குடி அருகே தங்கைகைலாசபுரத்தில் தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டாா்.
தங்கைகலாசபுரத்தைச் சோ்ந்த ச. வேல் (24), அவரது சகோதரி கணவரான அரசூா் பூச்சிக்காட்டைச் சோ்ந்த க. ஜெய்முருகன் (40) ஆகியோா் மரம் வெட்டும் தொழிலில் கூட்டாக ஈடுபட்டனா். இதனிடையே, வேல் தனியாக தொழிலில் ஈடுபட்டதால் இருவரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், ஜெய்முருகன், நண்பா்களான தேரியூா் செல்வம், சென்னையைச் சோ்ந்த சக்கி ஆகியோா் வேலின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டினராம். காயமடைந்த வேல் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.