வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்
நகராமல் அடம்பிடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கு 'ரெட் அலர்ட்'! - எப்போது வரை?
டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது.
கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல், அதே இடத்தில் நீடித்து வருகிறது.
இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் தென்மேற்கு திசையில் மெதுவாக நகரலாம். அடுத்த 12 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, இன்று காலை 10 மணி வரை...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இங்கே 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?
மழையை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.















