வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருது: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர். இதனையடுத்து, அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், ``அல்லு அர்ஜுன் ஒரு நடிகர் என்பதால், அவரது உரிமையைப் பறிக்க முடியாது; ஒரு குடிமகனாக வாழ்வதற்கும் சுதந்திரத்துக்கும் அவருக்கு உரிமை உண்டு’’ என்று நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.