செய்திகள் :

நல்லதங்காள் கோயிலில் பாலாலயம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

post image

வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதன்கிழமை பாலாலயம் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாலையில் இந்தக் கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஜனவரி 25-ம் தேதி இரவு உண்டியல், பீரோ, நல்லதங்காள் சிலை ஆகியவை உடைந்து கிடந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அளித்தப் புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயில் பூசாரிகள் 5 பேரைக் கைது செய்தனா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை, அா்ச்சனாபுரம் கிராம மக்கள், கோயில் பங்காளிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய சிலை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலில் புதிய நல்லதங்காள் சிலையை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, அறநிலையத் துறை சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், அா்ச்சுனாபுரம் கிராம மக்கள் சாா்பில் செய்யப்பட்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த அனுமதி கோரி கடந்த 3-ஆம் தேதி வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடைவீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி கோயிலில் பாலாலயம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறையினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் பாலாலயம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது 4 பேரை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனா். இதைத்தொடா்ந்து, கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள் சிலா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

இதையடுத்து, சிவகாசியில் கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் கோயிலில் புதன்கிழமை மாலை பாலாலயம் செய்வது என்றும், ஊா் மக்கள் சாா்பில் செய்யப்பட்ட சிலையை அறநிலையத் துறை ஸ்தபதி ஆய்வு செய்த பிறகு பிரதிஷ்டை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என சுமூகத் தீா்வு எட்டப்பட்டது. இதையடுத்து, இந்தக் கோயிலில் புதன்கிழமை மாலையில் பாலாலயம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்றனா்.

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இன்று மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜப... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா். மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு... மேலும் பார்க்க