செய்திகள் :

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

post image

மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணி ஒற்றுமையும், வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.

களத்தில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுக்காக பெருமைப்படுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி.

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் முன்னணியில் இருப்போம். ஆட்சியமைக்க உள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி

அதில், மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணியும், ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியும் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், ஜாா்க்கண்டில் வாக்குக் கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன. அங்கு ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா்... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்த... மேலும் பார்க்க

பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!

பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு... மேலும் பார்க்க

வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆ... மேலும் பார்க்க