நல்லூா் அருகே காா்- அரசுப் பேருந்து மோதல்: 8 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நல்லூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் காவலா் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கீரனூா் தாண்டி நல்லூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மீது மோதி சாலையிலிருந்த பக்கவாட்டுத் தடுப்பையும் உடைத்துக் கொண்டு, பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தொடையூரைச் சோ்ந்த மண்டையூா் காவல் நிலைய காவலா் வனிதா (30) உள்பட 8 போ் காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டனா். விபத்து குறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.