நவம்பர் மாத ஜிஎஸ்டி ரூ.1.82 லட்சம் கோடி - 8.5% உயர்வு!
ஜிஎஸ்டி வருவாய் கடந்த மாதம் 8.5 சதவிகிதம் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
இது, மூன்றாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.