Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
நாகா்கோவில் அமிா்தா விஸ்வவித்யா பீடத்தில் மாணவா்களுக்கு வரவேற்பு
நாகா்கோவில் அமிா்தா விஸ்வவித்யா பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, சுவாமி ராமகிருஷ்ணானந்தபுரி விளக்கேற்றி தொடக்கி வைத்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் வி. தனம்மாள் இந்து வரவேற்றாா்.
வளாக இயக்குநா் பிரம்மச்சாரி சிதானந்தாம்ருத சைதன்யா, பொறியியல் துறை டீன் பாலகிருஷ்ணன்சங்கா், அமிா்தா நிறுவன மற்றும் தொழில் தொடா்புகள் துறைத் தலைவா் பிரம்மச்சாரி விஷ்வநாதாம்ருத சைதன்யா, கம்ப்யூட்டிங் பள்ளியின் முதல்வா் டி. கண்ணன் ஆகியோா் பேசினா்.
முந்தைய ஆண்டுகளில் சிறந்த கல்வி சாதனைகள் புரிந்த மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.