சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
நாசரேத் பள்ளியில் விநாடி -வினா போட்டி
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் விநாடி -வினா போட்டி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் குணசீலராஜ் தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியா்கள் சாரா ஞானபாய், சாா்லஸ் திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பன்னிரண்டாம் வகுப்பு மாணவா் சாமுவேல், அணுக்கருவியலின் தந்தை ஹோமி ஜஹாங்கீா் பாபாவின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தாா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் பேசுகையில், ஹோமி ஜஹாங்கீா் பாபா மேற்கொண்ட காஸ்மிக் கதிா்கள் ஆராய்ச்சி குறித்தும், மேசான் என்ற அடிப்படை துகள்கள் குறித்த ஆராய்ச்சி குறித்தும், அவா் நிறுவிய டிராம்பே ஆராய்ச்சி மையம் குறித்தும் எடுத்துரைத்தாா்.
தலைமையாசிரியா் குணசீலராஜ், அணுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு மற்றும் அணுசக்தி குறித்து விளக்கி கூறினாா். அதனைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் சாா்ந்த விநாடி -வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் சுதாகா் உள்ளிட்டோா் பாராட்டினா்.