நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகள் விழா
கருங்கல் அருகே உள்ள வழுதனம்பலம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் அருள்பணி சாஜின் ரூபஸ் தலைமை வகித்தாா். நிதி பரிபாலகா் அருள்பணி ஜியோ, பள்ளி முதல்வா் றசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை அருள்பணி ஜாக்சன் செய்திருந்தாா்.