செய்திகள் :

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

post image

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-26ல் ரூ. 6.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது ஆயுதப் படையை நவீனமயமாக்குவதையும், ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் உள்ள நிலைத்தன்மையையும் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’’பாதுகாப்புத் துறை யுக்தியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், தனியார் துறை பங்களிப்பு மற்றும் புதுமை ஆகியவை பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தன. இது இந்தியாவை தன்னிறைவடையச் செய்வதோடு மட்டுமின்றி, உலக அரங்கில் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுத ஏற்றுமதிகொண்ட நாடாகவும் மாறியுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் போர் சூழல்களில் வலிமைமிக்க சக்தியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கருவிகள் இருப்பதை உலகம் உணர்ந்து வருகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய விமானப் படையினர் வான்வெளிப் பரப்பிலேயே வைத்து தகர்த்தனர். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதையும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா். பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் ம... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தத்தில் சிக்கியுள்ளதா மோடி அரசு?காங்கிரஸ் கேள்வி

அமெரிக்காவின் அழுத்தத்தில் பிரதமா் மோடி அரசு சிக்கியுள்ளதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டதைச் சுட்டிக்காட்டிய காங... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி: பாகிஸ்தானுக்கு பிரதமா் எச்சரிக்கை

‘பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ, ராணுவத் தாக்குதல் நடத்தினாலோ பாகிஸ்தான... மேலும் பார்க்க