செய்திகள் :

"நானும் தோனியும்தான்..." - 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் தேர்வானது பற்றி மனம் திறந்த கேரி கிர்ஸ்டன்!

post image

தோனி தலைமையிலான இந்திய அணி யுவராஜ் சிங் இல்லாமல் 2011-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்குமா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை அல்லது கடினம் என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கும்.

அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங்தான் தொடர் நாயகன் (15 விக்கெட், 362 ரன்கள்) விருதையும் வென்றார். அவர் விளையாடிய கடைசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் அதுதான்.

ஆனாலும், அவருக்குப் பிறகு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றையும் ஒன்றாகக் கொண்ட இடது கை வீரரை இந்தியா பெறவில்லை.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

இந்த நிலையில், 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கைத் தேர்வு செய்தது குறித்து அப்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மனம் திறந்திருக்கிறார்.

rediff ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்த கேரி கிர்ஸ்டன், "நல்லவேளை யுவராஜை நாங்கள் தேர்வு செய்தோம். ஏனெனில், கடைசி நேரத்தில் அவரை எடுக்கலாமா வேண்டாமா என்று நெருக்கமான பேச்சு இருந்தது.

அவ்வளவு எளிதில் அவர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால், அவரைத் தேர்வு செய்ய தோனியைப் போலவே நான் ஆர்வமாக இருந்தேன்.

ஏனெனில் அவருக்கு அவ்வளவு அனுபவம் இருந்தது. இறுதியில் உலகக் கோப்பை எவ்வாறு நிறைவடைந்தது என்று உங்களுக்கே தெரியும்.

யுவராஜை நான் எப்போதும் விரும்புவேன். எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. சில சமயங்களில் ஏமாற்றமளிப்பார், ஆனாலும் அவரைப் பிடிக்கும்.

அவர் எப்போதும் ரன்கள் அடிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். அவரின் பேட்டிங்கைப் பார்க்கும்போது அற்புதமாக இருக்கும்.

Gary Kristen - கேரி கிர்ஸ்டன்
Gary Kristen - கேரி கிர்ஸ்டன்

அவரின் இத்தகைய கரியருக்கு பேடி அப்டனுக்கு (2011 உலகக் கோப்பை இந்திய அணியின் மனநிலை மற்றும் மூலோபாய தலைமைத்துவப் பயிற்சியாளர்) கிரெடிட் கொடுக்க வேண்டும்.

அந்த உலகக் கோப்பைக்கு யுவராஜைத் தயார்ப்படுத்த பேடி நிறைய உழைத்தார்" என்று கூறினார்.

2011 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான காலிறுதிப் போட்டியில் யுவராஜ் இரண்டு முக்கியமான விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் சேஸிங்கில் அரைசதம் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று இந்தியாவை வெற்றிபெறவைத்தது அவரின் கிரிக்கெட் கரியரில் முக்கியமான ஆட்டமாக இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து மௌனம் களைத்த ஆண்டர்சன்... சச்சின் பற்றி என்ன கூறினார்?

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர... மேலும் பார்க்க

Ind vs Pak: `ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்!' - போட்டி ரத்து குறித்து நிர்வாகம்

அனைத்து சர்வதேச அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் WCL போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆ... மேலும் பார்க்க

Eng vs Ind: "தோனியாகவோ, கோலியாகவோ சுப்மன் கில் ஆக முடியாது; ஏனெனில்.." - ஹர்பஜன் கூறும் காரணம் என்ன?

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு, கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு சோதனைத் தொடராக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக இந்திய அணியை முதல... மேலும் பார்க்க

Eng vs Ind: "பும்ரா ஆடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல; காரணம்..." - கிரெக் சேப்பல் சொல்வது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மிக இக்கட்டான சூழலில் சிக்கும்போதெல்லாம் தனியாளாகப் போட்டியை வென்று தரக்கூடிய நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார்.ஆனால், அதுவே அவரது ஃபிட்னஸ் மீதான அழுத்தமாகவும் மாறியி... மேலும் பார்க்க

Andre Russell: "இந்தியாவுடனான அந்த செமி பைனல்தான் என் கரியரின் பெஸ்ட் மொமென்ட்" - பகிரும் ரஸல்

இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி... மேலும் பார்க்க

Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்..." - முன்னாள் வீரர் மதன் லால் அழைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வைத் திரும்பப்பெற்றுவிட்டு களத்துக்குத் திரும்ப வேண்டுமென குரல் கொடுத்துள்ள... மேலும் பார்க்க