நான்தேட் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை!
மகாராஷ்டிரத்தின் நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜவின் சதுக்ராவ் ஹம்பார்டே முன்னிலை வகித்து வருகிறார்.
காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ல் காலமானதையடுத்து நான்தேட் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
நவம்பர் 13ல் நான்தேட் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இன்று காலை 12 மணி நிலவரப்படி..
பாஜகவின் ஹம்பார்டே 158778 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், காங்கிரஸ் வேட்பாளரான ரவீந்திர சவான் 147115 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளனர். காங்கிரஸை விட பாஜக 11663 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் நான்தேட் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதாப் பாட்டீல் சிக்கலிகர், அப்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அசோக் சவானைத் தோற்கடித்தார்.
சிக்கலிகர் 2024 மக்களவைத் தேர்தலில் நான்தேட்டில் இருந்து வசந்த் சவானிடம் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் அசோக் சவான் பஜாகவில் சேர்ந்தபோது, சிக்கலிகர் இப்போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டு முறை எம்எல்ஏவாகப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்தேட்டில் உள்ள லோஹா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.