அவதூறு விடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்: ஏ. ஆர். ரஹ்மான்
"நான் இன்னும் சாகலை!" - மூதாட்டிக்கு இறுதி சடங்கு ஏற்பாடு; எழுந்து அமர்ந்ததால் அதிர்ந்த உறவினர்கள்!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது- 60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையை கடந்து அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால், அவரை அவரது உறவினர்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண்மணி இறந்ததாக கருதிய அவரது உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். எல்லா ஊர்களில் உள்ள உறவினர்களும் வரவழைக்கப்பட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்னொரு பக்கம், கடைசியாக அந்த மூதாட்டிக்கு இறுதி சடங்கு நடத்த மயானப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென கண் விழித்ததோடு, 'நான் என்ன செத்தா போய்விட்டேன்?. நான் இன்னும் சாகலை. என்னை எரிக்க்ப் பார்க்கிறீங்களா?. எனக்கு இப்போதைக்கு சாவில்லை' என்று கூறியதால், அருகில் இருந்த உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதனால், உடனடியாக தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அந்த மூதாட்டியை அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டிக்கு தற்போது அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்கு செய்ய முயற்சித்தபோது மூதாட்டி ஒருவர் கண் விழித்து பேசியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.