செய்திகள் :

'நான் நவீனகால இயேசு' - வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நசீர் பெஸ்ட்டின் பின்னணி

post image

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்த, அந்த நபர் காயமடைந்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட, சிகிச்சைக்குப் பலனில்லாமல் இறந்துள்ளார்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எதற்காக இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.

வெள்ளை மாளிகைக்கு அருகே, இவர் நடமாடக்கூடாது என்கிற நீதிமன்றங்களின்‌ முந்தைய உத்தரவுகளை மீறி செக் பாயிண்டிற்கு வந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நியூயார்க் போஸ்ட் தகவலின் படி, வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பல என்ட்ரி பாயிண்டுகளில் முன்பு சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.

நசீர் பெஸ்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம், வெள்ளை மாளிகைக்கு அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்திருக்கிறார்.

அப்போது விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மனநல மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச்‌ சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குள், வெள்ளை மாளிகையின் தடைசெய்யப்பட்ட நடைபாதையில் நடந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

அப்போது பெஸ்ட் தன்னை 'இயேசு கிறிஸ்துவின் நவீனகால அவதாரம்' என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மேலும் 'நான் கைது செய்யப்பட வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பின், கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பின், நேற்று வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க