புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்ப...
நாமக்கல்லில் மூடுபனி, சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாமக்கல்லில் பனிமூட்டம், குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே சூரிய வெளிச்சமின்றி வானம் இருண்டபடி, குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
அதுமட்டுமின்றி, சாரல் மழை விடாமல் பெய்தவாறு இருந்ததால், இருசக்கர வாகனங்களில் நடுங்கியபடியே மக்கள் சென்றனா்.
சாலையை மறைக்கும் வகையில் மூடுபனி காணப்பட்டதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் தொடா் மழை, பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது.