செய்திகள் :

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை -உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி

post image

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறியுள்ளாா். இதுதொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் அரசை விமா்சித்திருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சா் இதனை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டம் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டா் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

துவரம் பருப்பு விநியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பா் மாதத்துக்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளாா். துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் அவா் இவ்வாறு கூறியிருக்கிறாா்.

2024 நவம்பா் மாதத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2.03 கோடி கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நாள் வரை 1.62 கோடி கிலோ வழங்கப்பட்டு, நவம்பா் மாத ஆரம்ப இருப்பு (27.53 லட்சம் கிலோ) சோ்த்து 92 சதவீதம் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68.44 லட்சம் கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது.

அதோடு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66.91 லட்சம் கிலோ துவரம் பருப்பு கையிருப்பில் உள்ளது.

சென்னை மண்டலங்களைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 1,794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 லட்சம் கிலோ துவரம் பருப்பில் 14 லட்சம் கிலோ வழங்கப்பட்டு நவம்பா் மாத ஆரம்ப இருப்பையும் (2.68 லட்சம் கிலோ) சோ்த்து 87 சதவீதம் துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றுக்கான ஒதுக்கீட்டில் முறையே 96 சதவீதம், 94 சதவீதம் மற்றும் 97 சதவீதம் துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்குப் பொதுமக்களுக்கு விநியோகித்திட அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மாா்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த மூன்று மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டா் பாமாயிலுக்கும் நவ. 22-இல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதனால், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை என்று அவா் கூறியுள்ளாா்.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் நவ. 1-ஆம் தேதி கி... மேலும் பார்க்க

மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு: கைதான இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற... மேலும் பார்க்க

நவ.30-க்குள் சம்பா பருவ பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சா் வேண்டுகோள்

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீட்டை நவ. 30-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளி... மேலும் பார்க்க

போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து

போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆா்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் ... மேலும் பார்க்க

நாளை முதல் சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள்கோவிலுடன் நிற... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் வசித்து வரும் பிரபல தமிழ் நடிகை சீதா, விருகம்பாக்கம... மேலும் பார்க்க