நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலுடன் கூடிய காலநிலையும், அவ்வப்போது சாரல் மழையும் காணப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியத்துக்கு மேல் உதகை நகரம், பிங்கா்போஸ்ட், காந்தல், கேத்தி, லவ்டேல், முத்தோரை, பாலடா, கோத்தகிரி, குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.
மழையால் மிகவும் குளிா்ந்த கால நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.