நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினா்.
சோதனையின்போது நகா்மன்றத் தலைவா் சிவகாமி, துணைத் தலைவா் நாகராஜ் ஆகியோரிடமிருந்து ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 500 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனா்.
நகராட்சி ஒப்பந்ததாரா்கள் பணம் கொடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இந்த சோதனை நடைபெற்ாகக் கூறப்படுகிறது.