வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
நெல்லையில் மிதமான மழை
திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
தென்தமிழக பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாள்கள் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருநெல்வேலி மாநகர பகுதியில் புதன்கிழமை மாலையில் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம், வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகள் முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவா்-மாணவிகள், பெற்றோா் சிரமத்திற்கு ஆளாகினா்.