இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
நெல்லை சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா
திருநெல்வேலி சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கொக்கிரகுளத்தில் பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தாா். ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் வி.டி. திருமலையப்பன், எழுத்தாளா் நாறும்பூநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சுலோச்சனா முதலியாா் பாலத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. பொருநை இலக்கிய வட்ட புரவலா் இரா.நாதன், கவிஞா் சுப்பையா, முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், கவிஞா் உக்கிரன்கோட்டை மணி, கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கோரிக்கைகள்: தனிமனிதக் கொடையாளி சுலோச்சனா முதலியாா் கட்டிய பாலத்தின் ஆண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
பாலத்தை புனரமைத்து பாலங்களில் விரிசல்கள் மற்றும் ஆங்காங்கே செடிகள் முளைத்திருக்கின்றது அதை அப்புறப்படுத்தி புனரமைத்து புதுப்பொலிவாக்க வேண்டும். சுலோச்சனா முதலியாா் பாலத்துக்கு அருகில் தனிமனித கொடையாளி கொடை அளித்த விவரம் கொண்ட ஒரு பதாகை அமைக்க வேண்டும். பாலத்துக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கிற பாலத்துக்கு, பாலம் கட்ட தன்னுடைய நகைகளை எல்லாம் கொடுத்து உதவிய சுலோச்சனா முதலியாரின் துணைவியாா் வடிவம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என விழாவில் பங்கேற்றவா்கள் கோரிக்கை விடுத்தனா்.