மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல்
பேரளத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.
பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் சில நாள்களாக இந்த பணிகள் நடைபெறவில்லையாம்.
இதனால், நன்னிலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளன.
இதனால் சுமை தூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் வேலையின்றி இருந்து வந்தனா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கூறியும் பயனில்லை.
இதில் ஆத்திரமடைந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் முருகையன் தலைமையில் திருவாரூா்-மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா் காவல் துறையினா் மற்றும் நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் வியாழக்கிழமை (பிப்.27) முதல் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படும் என எழுத்து மூலம் தெரிவித்ததன் அடிப்படையில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.