ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
நேற்றைய வீழ்ச்சிக்குப் பிறகு 1% உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை வாங்கியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 880.16 புள்ளிகள் உயர்ந்து 79,923.90 புள்ளிகளாக இருந்தது. வர்த்தநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 24,131.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் அண்டு டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயினது. அதே வேளையில் பவர் கிரிட், நெஸ்லே, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
இதையும் படிக்க: ரூ.8,500 கோடி நிதி திரட்டிய சொமேட்டோ!
அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய பங்குகள் தேசிய பங்குச் சந்தையின் ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 29) பிற்பகலில் 23 சதவிகிதம் வரை உயர்ந்தன. இந்த 3 குழும பங்கில், அதானி கிரீன் பங்குகள் வலுவான ஏற்றத்தைக் பதிவு செய்தது. இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது அமர்வாக அதன் விலையானது 23 சதவிகிதம் உச்சவரம்பை எட்டியது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வாங்கலாம் என்ற பரிந்துரையை வெளியிட்டதையடுத்து, தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 4 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து நிஃப்டியை வழிநடத்தியது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் உயர்ந்தது கிட்டத்தட்ட முந்தைய அமர்விலிருந்து அனைத்து இழப்புகளையும் மீட்டெடுத்தது.
பிற்பகல் வர்த்தகத்தில் நிஃப்டி பார்மா, எனர்ஜி, இன்ஃப்ரா மற்றும் ஆட்டோ 1 முதல் 2.4 சதவிகிதம் உயர்ந்தன. சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகியவற்றின் பேரணி சென்செக்ஸ் குறியீட்டை உயர்த்தியது. அதே வேளையில் மெட்டல், ஐடி, எஃப்எம்சிஜி உள்ளிட்ட பங்குகள் 1 சதவிகிதம் வரை உயர்ந்தது.
பொதுத்துறை வங்கி குறியீடு 0.5 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றின் பங்குகள் 0.2 சதவிகிதம் உயர்ந்தன.
பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.76 சதவிகிதமும், மிட்கேப் குறியீடு 0.31 சதவீதமும் உயர்ந்தன.
அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றத்தில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தியைில் அதானி கிரீன் எனர்ஜி 21.72 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 15.56 சதவிகிதமும் உயர்ந்தது.
ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயரந்து முடிந்த வேளையில், சியோல், டோக்கியோ மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. தேங்க்ஸ் கிவிங் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க சந்தைகள் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.11,756.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.06 அமெரிக்க டாலராக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் நேற்று 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 புள்ளிகளில் நிலைபெற்ற நிலையில் நிஃப்டி 360.75 புள்ளிகள் சரிந்து 23,914.15 ஆக இருந்தது குறிப்ப்டத்தக்கது.